சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

Added : நவ 11, 2019
Advertisement

பள்ளங்களால்பரிதவிப்பு

மதுரை மூன்றுமாவடி-அய்யர்பங்களா இணைப்பு பழைய ரோட்டில்சமீபத்திய மழையால்
கற்கள் பெயர்ந்து பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டை ஆக்கிரமித்து கட்டங்கள், குடிநீர் தொட்டியுள்ளன. பழைய ரோட்டை தற்காலிமாவதுசீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரீத்தி, எழில்நகர்.

மோசமான ரோடு

மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாச்சலம் தெருவில் கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம்இருப்பது தெரியாமல் வாகனஓட்டிகள், பாதசாரிகள் விழுந்து காயமுறுகின்றனர். ரோட்டை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்ஷினி, எஸ்.எஸ்.காலனி.
கால்நடைகளால் விபத்து

மதுரை மூன்றுமாவடிபுளியடிதம்பம் மண்டபம் முன் அழகர்கோவில் ரோட்டில் 24 மணி
நேரமும் 20க்கும் மேற்பட்ட மாடுகள் திரிகின்றன. மண்டபம் முன்பு உள்ள தொட்டியில் எச்சில் இலைகள் உள்ளிட்ட கழிவுகள் சிதறி கிடப்பதால் கால்நடைகள் மேய்கின்றன.ரோட்டில்
திடீரென குறுக்கிடும் கால்நடைகளால் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
-கிேஷார் குமார், மூன்றுமாவடி.

விளக்கு இல்லாததால் வழிப்பறி

மதுரை பனங்காடி விலக்கு அருகே தெரு விளக்குகள் எரியவில்லை. இந்த ரோடு வழியாக தான் மாட்டுத்தாவணியிலிருந்து திண்டுக்கல் ரோட்டிற்குஏராளமான வாகனங்கள் சென்று
வருகின்றனர். இரவு டூவீலர்களில் செல்வோரிடம் வழிப்பறி நடக்கிறது. தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

-ஜீவன், உச்சபரம்புமேடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X