காரைக்கால்:காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா மற்றும் தாளடி நெல்சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இதுவரை 2285 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2100 எக்டர் நிலம் நடவுக்கு தயாராக உள்ளது. பயிர்களுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் உழவர் உதவி இயக்கத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் மைய கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை விநியோக சங்கம் மூலம் வினியோகம் செய்ய 25 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளது.யூரியா உள்ளிட்ட உரங்கள், விவசாயிகளுக்கு தடையின்றி பெற்றிட, விவசாயிகள் அந்தந்த பகுதி உழவர் உதவி இயக்கத்தின் மூலம் வழங்கப்படும். தற்போது கால சூழலில் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு. தண்டுத் துளைப்பான். ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட யூரியா உரத்தை நான்கு பாகமாகப் பிரித்து 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இட அறிவுறுத்தப்படுகிறதுஇத்தகவலை கூடுதல் வேளாண் இயக்குனர் செல்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE