பொது செய்தி

தமிழ்நாடு

சுண்டியிழுக்கும் புளி்யடிஸ் போளி

Added : நவ 11, 2019
Advertisement

மதுரை என்றாலே ஜிகர்தண்டா நினைவுக்கு வந்து விடும். ஆனால் ஒன்றல்ல... இரண்டல்ல.. 52 ஆண்டுகளாக மதுரை மஞ்சணக்காரத்தெரு திருமலைநாயக்கர் மகால் 3வது தெரு புளியடிஸ் போளிக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு மதுரை மட்டுமின்றி கடல் கடந்தும் செல்கிறது இந்த புளியடிஸ் போளி. ஒரே பொருள் 52 ஆண்டுகளாக அனைவரையும் சுண்டியிழுப்பதற்கு காரணம் அதன் தரமும், ருசியும் தான்.
புளியடி என்பது சவுராஷ்டிரா சமூகத்திலுள்ள ஒரு பிரிவு. அப்பிரிவை சேர்ந்த ரத்தினம்மாள் வீட்டிலேயே கையால் தயாரித்த போளி என்பதால் புளியடிஸ் போளி என பெயர் பெற்றது. ரத்தினம்மாளுக்கு பிறகு அவரது மருமகள் சாந்தியின் கைவண்ணத்தில் போளியின் அதே ருசியும், தரமும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போளி பிறந்த கதை குறித்து சாந்தி...

மாமனார் சுப்ரமணியன் கோதண்டமில்லில் வேலை செய்து வந்தார். மாமியார் ரத்தினம்மாள். அவர்களுக்கு எட்டு பெண்கள். ஒரே ஆண் என் கணவர் சுப்பிரமணியன். மாமனார் பணிபுரிந்த மில் மூடப்பட்டதால் குழந்தைகளை காப்பாற்ற ரத்தினம்மாள் இட்லி சுட்டு விற்க துவங்கினார். அதற்கு வரவேற்பு கிடைக்க போளியும் தயாரித்து விற்றார். அப்போதே அதிகளவில் விற்றதால் முழுமூச்சாக அதில் இறங்கினார். என் கணவர் சுப்பிரமணியனும் சீதாலட்சுமி மில்லில் பணிபுரிந்து வந்தார். அந்த மில்லும் மூடப்பட்டதால் அவரும் இத்தொழிலில் இறங்க நானும் இணைந்து கொண்டேன்.

மாமியார் மறைவிற்கு பிறகு தரம் மற்றும் ருசியில் குறைவு இல்லாதளவிற்கு நான் தயாரித்து வருகிறேன். தேங்காய், ரவா, பருப்பு, முந்திரி, ஸ்பெஷல் என ஐந்து வகையான போளிகளை தயாரிக்கிறோம். மற்ற போளிகள் ஒரே நாளில் கெட்டு விடும். ஆனால் புளியடிஸ் போளிகளை நீண்டநாட்கள் வைத்திருந்து ருசிக்கலாம். முழுக்க பசு நெய்யிலிருந்து தயாரிக்கிறோம்.

இதற்காக தெரிந்த விவசாயிகளின் பசு நெய் மட்டுமே லிட்டருக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்குகிறோம். முழுக்க முழுக்க சுத்தம் சுகாதாரத்துடன் பெண்கள் உதவியுடன் வீட்டிலேயே கையால் போளிகள் தயாராகின்றன. ஒரு தேங்காய் போளி ரூ.20. ஸ்பெஷல் போளி ரூ.100.

வெளிநாடுகளுக்கு செல்வோர் கூட எங்கள் போளியை வாங்கி செல்கின்றனர் என்றார். காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை போளியை வாங்கலாம்.
போளியை ருசிக்க 98430 49291.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X