பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னு விளையும் பூமி குலமங்கலம் எங்கள் சாமி

Added : நவ 11, 2019
Advertisement

மதுரை:மதுரை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பல தரிசாக, மனைகளாக மாறிய நிலையில் குலமங்கலத்தில் பார்க்கும் இடங்கள் பச்சை கம்பளம் விரித்தது போல பசுமை போர்த்திஇருப்பதை காண கண் கோடி வேண்டும். நெற்கதிர்களை பாசத்துடன் அரவணைக்கும் பெரியாறு பாசன கால்வாய் கரைகளில் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள அழகை ரசிக்கலாம்.

'பொன்னு விளையும் பூமி குலமங்கலம் எங்கள் சாமி' என கண்ணும் கருத்துமாக நெல் குருத்துக்களை பார்த்து பக்தி பரவசமாகி கை எடுத்து கும்பிடும் விவசாயிகள் ஊரின் பெருமை குறித்து மனம் திறந்தனர்.


நிரம்பி வழியும் கிணறுகள்

ஏரோநாடிக்கல் படித்தாலும் விவசாய ஆர்வத்தால் முழு நேர விவசாயியாக மாறினேன். 600
எக்டேருக்கு வயலும் வயல் சார்ந்த இடமாக காட்சி தரும் குலமங்கலத்தில் 200 விவசாயிகள் உள்ளனர். ஆண்டுக்கு இரு போகம் நெல் விளைச்சல் தரும் இங்கு பெரியாறு பாசன கால்வாய் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. சில நாட்களாக பெய்யும் மழையால் பாசன கிணறுகள் நிரம்பி வழிகின்றன.

பாரம்பரிய முறைப்படி உரங்களை உருவாக்கி நச்சு உரங்களை தவிர்த்து வருகிறேன்.
நுண்ணுயிரிகள் மூலம் பசுமைக் கழிவுகளை மக்கச்செய்து அதில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. நச்சு மருந்து, உரங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டேன். மற்ற
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இங்கு டி.கே.எம் 13, ஏ.எஸ்.டி.ஐ 6, அட்சயா ரகங்களை பயிரிட்டுள்ளோம்.

- ராமசுப்பிரமணியன், விவசாயி

மனைகள் ஆகாத நிலங்கள்

குலமங்கலத்தில் பெரியாறு கால்வாய், வடுகபட்டி, கண்மாய்களை நம்பி விவசாயம் நடக்கிறது. இம்முறை கால்வாயில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் ஒரு போகம் மட்டுமே விளைச்சல் கிடைக்கும். பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இங்குள்ள விவசாயிகள் நிலங்களை மனைகளாக மாற்றாமல் பல தலைமுறைகள் தாண்டி விவசாயத்தை தொடர்கின்றனர்.
கண்மாய், ஊருணிகளை துார்வாரினால் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். நடவுக்காக வங்கியில் கடன் கேட்டால் நடவு முடிந்த பிறகு தான்
தருகின்றனர். அரசு விவசாயிகளுக்கு போதிய கடன் வழங்கி, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

- பால்சாமி, விவசாயி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X