பசுமை புரட்சி ஏற்படுத்திட வா நண்பா தோள் கொடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை புரட்சி ஏற்படுத்திட வா நண்பா தோள் கொடு

Added : நவ 11, 2019
Share
மதுரை வா நண்பா தோள் கொடு மற்றும் ஆரோக்யா வெல்பர் டிரஸ்ட் சார்பில் மேலுார் அரசு இரு பாலர் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சிக்கு வித்திட்டு வருவதில் வா நண்பா தோள் கொடு அமைப்பிற்கு தனி இடம் உண்டு. இதன் தலைவர் ரஹ்மான், செயலாளர் சரவணன், துணை தலைவர் காளி உட்பட டாக்டர்கள், பொறியாளர்கள் உட்பட 400

மதுரை வா நண்பா தோள் கொடு மற்றும் ஆரோக்யா வெல்பர் டிரஸ்ட் சார்பில் மேலுார் அரசு இரு பாலர் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சிக்கு வித்திட்டு வருவதில் வா நண்பா தோள் கொடு அமைப்பிற்கு தனி இடம் உண்டு. இதன் தலைவர் ரஹ்மான், செயலாளர் சரவணன், துணை தலைவர் காளி உட்பட டாக்டர்கள், பொறியாளர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஞாயிறுதோறும் பள்ளி மற்றும் பொது இடங்களில் மரங்கன்றுகளை இலவசமாக நட்டு கூண்டுகள் அமைத்து தருகின்றனர்.
பசுமை புரட்சிக்கு தோள் கொடுக்க 98941 89550 க்கு ஹலோ சொல்லாம்.
மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உள்ளதால் கடம்பம், வேங்கை, புங்கை உள்ளிட்ட
மரங்களை நட்டு வருகிறோம். மக்களிடம் துாய்மை, பசுமை பற்றிய விழிப்புணர்வை ஏழாண்டுகளாக ஏற்படுத்தி வருகிறோம். போலியோ விழிப்புணர்வு, ரத்ததானம், முதியோர்
இல்லங்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்
- இளமதிவாணன்

நிர்வாகி, வா நண்பா தோள் கொடு

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X