பொது செய்தி

இந்தியா

புற்று நோய் இலவச பரிசோதனை முகாம்

Added : நவ 11, 2019
Advertisement
 புற்று நோய் இலவச பரிசோதனை முகாம்

வில்லியனுார்:வில்லியனுார் அரசு ஆண்கள் ஆரம்பப் பள்ளியில் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஜிப்மர் கேன்சர் மருத்துவ பிரிவு, இன்னர் வீல் கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ், வாஞ்சிநாதன் இளந்தமிழர் மன்றம் மற்றும் விவேகானந்த பள்ளி முன்னாள் மாணவர் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு ஜிப்மர் கேசன்சர் மருத்துவ பிரிவு துறைத் தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். இன்னர்வீல் கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் தலைவர் பங்காரு அம்மாள், விவேகானந்த பள்ளி முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் ராமசிவராஜான், தண்டபானி, அருள்ஜோதி முன்னிலை வகித்தனர். வாஞ்சிநாதன் மன்ற தலைவர் ராமன் வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.காலை 9:00 மணிக்கு துவங்கி பிற்பகல் 2:00 மணிவரை நடந்த மருத்துவ பரிசோதனை முகாமில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் சந்தரமவுளி, அபிஜித், அனுமிதா, கலாரஞ்சனி, ஸ்ரீசவுமியா, கவுசல்யா ஆகியோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பரிசோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X