புதுச்சேரி,:இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்டில், கடந்த 2013ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. முதலில், ரயில் பாதை மேல் பகுதியில் மட்டும் ரூ. 5 கோடி செலவில் ரயில்வே துறை மேம்பாலம் கட்டி முடித்தது. மேம்பாலத்தை இணைக்கும் இணைப்பு பாலம் கட்டும் பணியை, புதுச்சேரி மாநில நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது. ரூ. 28 கோடி செலவில், இணைப்பு பாலம் கட்டும் பணி துவங்கியது.
இணைப்பு பாலத்திற்கு நில ஆர்ஜிம் செய்யாததால், மேம்பாலம் பணி ஜவ்வாக இழுத்து கொண்டுள்ளது. நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால், பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் நமச்சிவாயம், நிலத்திற்கான இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்து, பணிகளை துவக்கி வைத்தார்.நில உரிமையாளர்கள் நிலத்திற்காக இழப்பீடு வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மேம்பால கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்து.புதுச்சேரி அரசு, நிலத்திற்கான தொகை வருவாய்த்துறையில் செலுத்தி விட்டதாக கூறியதைத் தொடர்ந்து, மேம்பால பணிக்கான இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மீண்டும் மேம்பால கட்டுமான பணியை துவக்கினர். மேம்பாலம் அருகில் உள்ள மரவாடி பகுதியில், பில்லர் அமைப்பதற்காக பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE