பொது செய்தி

இந்தியா

பாரததேவி பள்ளியில் கோபூஜை

Added : நவ 11, 2019
Advertisement
 பாரததேவி பள்ளியில் கோபூஜை

திருபுவனை:மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் வித்யா பாரதி சார்பில் 'கோபூஜை விழா' நடந்தது.
விழாவிற்கு புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துளசி தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் இளமதியழகன் வரவேற்றார்.வித்யா பாரதியின் பொறுப்பாளர்கள் ரவி, சத்யநாராயணன், நடராஜன், இயற்கை விவசாயி சீனு.பரசுராமன் ஆகியோர் கோபூஜையை நடத்தி வைத்து பேசினர்.நாட்டு பசுக்களின் சிறப்புகள், பயன்கள், அதன் மருத்துவ குணங்கள், இயற்கை விவசாயம், தேசத்தின் இயற்கைப் பாதுகாப்பு போன்றவற்றில் நாட்டு பசுக்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது. பசு வளர்ப்பின் மூலம் வருவாய், பசும்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் விருந்தினர்கள் விளக்கிப் பேசினர்.பொறுப்பாசிரியை தேவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X