பொது செய்தி

தமிழ்நாடு

இருளில் இதயம் நிறைத்த இசை

Added : நவ 11, 2019
Share
Advertisement

மதுரை:மதுரை தியாகராஜர் கல்லுாரியில் அனில் ஸ்ரீனிவாசன் குழுவினரின் 'இருளில் இசை கச்சேரி' நிகழ்ச்சி நடந்தது.

அனில் ஸ்ரீனிவாசன் பியானோ, நவீன் நேப்பியர் பேஸ் கிடார், கிருஷ்ண கிஷோர் பெர்குசியன்ஸ் வாசித்தனர். இக்கச்சேரியில் பாடகர்கள் கிடையாது. முழுக்க, முழுக்க இம்மூன்று இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 40க்கும் மேற்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன.சிறப்பு குழந்தைகளுக்காக இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக இருள் நிறைந்த அரங்கில் நடத்தப்பட்டது.

இருட்டிலேயே மூவரும் கருவிகளை வாசித்தனர். அரங்கில் இருந்தவர்களின்இதயத்தை
இருளில் பரவிய இசை நிறைத்தது. நிகழ்ச்சியின் இடையே 20 நிமிடங்கள் மட்டும்விளக்குகள் எரியவிடப்பட்டன. சிறப்பு குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X