ரோட்டில் தேங்கும் மழைநீர்; காலி பிளாட்டில் தேங்கும் கழிவுநீர் அவதியில் எம்.எம்.எஸ்.காலனி குடியிருப்போர்

Added : நவ 11, 2019
Advertisement

மதுரை:மதுரை மாநகராட்சி வார்டுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பல வகையில் சிரமப்படுகின்றனர். இந்தபட்டியலில் அய்யர்பங்களா எம்.எம்.எஸ். காலனி பகுதியும் ஒன்று. மாநகராட்சியுடன் 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட இப்பகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.

எம்.எம்.எஸ்., காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கண்ணன், தீனதயாளன்
கூறியதாவது: மழை பெய்தால் ரோடு சதுப்பு நிலமாக மாறி விடுகிறது. 4 மற்றும் 8 வது
தெருக்களில் மழை நீர் முழங்கால் அளவுக்குதேங்கியுள்ளது. அதை தாண்டி வீடுகளுக்கு
செல்வது சவாலாக உள்ளது.ஓரிரு நாட்களுக்கு முன் மூதாட்டி சகதி வழுக்கி கீழே விழுந்தார்.

ரோடுகள் அமைக்கும் வரை தற்காலிகமாக ரோடு அமைக்கலாம்.தெருக்களில் மழைநீர்
தேங்குவது போல காலி பிளாட்டுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி இம்சை செய்கின்றன. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. காலி பிளாட்டுகளில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெருக்களில் ஆங்காங்கு குப்பை தொட்டிகள் வைத்து முறையாக அகற்ற வேண்டும்.

இச்சங்கத்தில் உள்ள 250 வீடுகளில் 160 வீடுகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள்
உள்ளன. குழாய்கள் பொருத்திய ஒரு மாதம் வரை குடிநீர் வந்தது. தற்போது குடிநீர் வருவது இல்லை. லாரி, வேன் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலம் உள்ளது. இப்பகுதி
பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை எடுத்துரைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X