பொது செய்தி

இந்தியா

சமூக வலைதளங்கள் கண்காணிப்பு போலீசார் எச்சரிக்கை

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் சமூக வலைதள பயன்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் வழிப்பாட்டு தலங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலை யம், மால் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், சமூக வலைதள தகவல்களையும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக போலீஸ் துறை சார்பில், புதுச்சேரி போலீஸ் வாட்ஸ் ஆப் குழுவில், விடுத்துள்ள பதிவு:புதுச்சேரி போலீர், பொதுமக்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். சமூக வலைதளம் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும். சரி பார்க்கப்படாத தவறான பதிவுகளை அனுப்பக்கூடாது. சமூக வலைதளம் சட்டத்தின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X