புதுச்சேரி:புதுச்சேரி பாரதிதாசன் அருங்காட்சியகத்தில், இளைஞர் இலக்கியமும் பாவேந்தரும்' எனும் தலைப்பில் கலை இலக்கிய விழா நடந்தது.
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கிய விழா,பெருமாள் கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்தது. பாரதிதாசன் மைந்தர் மன்னர் மன்னன் பிறந்தநாள் கவியரங்கமும் இணைந்து நடத்தப்பட்டது.அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கி,கல்வியும் ஆற்றலும் பெற்று இன்றைய இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
பண்பாட்டில் சிறந்தவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும். பாரதிதாசன் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் நிறைய எழுதியுள்ளார்.அவைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் தேன்மொழி வரவேற்றார்.புதுச்சேரி தமிழகத்தை சேர்ந்த 48 கவிஞர்கள் கவிதை வாசித்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. பாவலர்கள் ரமேஷ் பைரவி, பாலமுருகன், சத்தியமூர்த்தி, விசாலாட்சி, மஞ்சமாதா செல்வதுரை, ஓவியர் சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தேசிய விருதாளர் மணியம்மை நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE