ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:அரியாங்குப்பத்தில் ரவுடி வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்த சம்பவத்தில், மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், சுப்பையா நகர், பாரதி வீதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் பாண்டியன் 26; கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட பாண்டியன் கடந்த 5ம் தேதி மாலை அதேபகுதியில் உள்ள மைதானத்தில் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சுப்பையா நகர் சுரேந்தர்,19; அரியாங்குப்பம் அஸ்வின்,28; மணவெளி நரேஷ்,21; ஆகியோரை கடந்த 8ம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும், நான்கு பேரை தேடிவந்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில் மாஞ்சாலை, தீர்த்தக்குளம் வீதி விக்னேஷ் (எ) சேது,22; அன்னை இந்திரா நகர், முதல் குறுக்கு தெரு கிருஷ்ணா,23; சண்முகா நகர், சிங்காரவேலர் வீதி அருண்,22; சண்முகா நகர், சுப்பையா வீதி மோகன்பிரசாத்,22; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து நான்கு கத்திகள், மூன்று மொபைல் போன்கள், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள், போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்; கொலை செய்யப்பட்ட பாண்டியன், சேதுவும் நண்பர்கள். இரண்டு ஆண்டிற்கு முன் பாண்டியன் நண்பர்கள், அப்பகுதி விழாவில் நடந்த நிகழ்ச்சிக்காக, பாண்டியன் படத்தை மட்டும் போட்டு போஸ்டர் ஒட்டினர்.அதனை சேது தட்டிக் கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாண்டியன், சேது மற்றும் அவரது நண்பர்களான அப்புகுட்டி, கிருஷ்ணன் ஆகியோரை கத்தியால் வெட்டினார். அதுமுதல், பாண்டியன், சேது தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன், சேது கும்பலை சேர்ந்த சுபாஷை, பாண்டியன் வெட்டினார்.இதனால் கோபமடைந்த சேது, பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X