பொது செய்தி

இந்தியா

நெல்லுமண்டி வீதி 'பஞ்சர்' வாகன ஓட்டிகள்  அவதி

Added : நவ 11, 2019
Advertisement
 நெல்லுமண்டி வீதி 'பஞ்சர்' வாகன ஓட்டிகள்  அவதி

புதுச்சேரி:முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதியில் ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதி வழியாக பல்வேறு நகர் பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் இச்சாலை, முறையாக பராமரிக்கப்படாமல் ஜல்லிகள் பெயர்ந்து, சேதமாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையால், சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கிடையே சென்றுவரும் அவல நிலை உள்ளது. எனவே, சாலையை சரி செய்து பொதுமக்களின் அவதியை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X