புதுச்சேரியில் 500 போட்டிகள் நடத்த சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கம் முடிவு 

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரிசி.ஏ.பி. கிரிக்கெட் சங்கம் சார்பில் அடுத்த ஆண்டு 500 கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து புதுவை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி கவுரவ செயலர் சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி (சி.ஏ.பி.) பல்வேறு வயது பிரிவுகளில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த 15 பேர் கொண்ட 8 மண்டல அணிகளுக்கு(16 வயது பிரிவு) இடையே போட்டிகள் நடத்தப்படவுள்ளது.புதுச்சேரியில்உள்ள 24 கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும். கிளப்புகளுக்கு இடையிலான லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகள் நடத்தப்படும். இதில் மூன்று வெளியூர் வீரர்கள் கெஸ்ட் வீரர்களாக விளையாட அனுமதிக்கப் படுவர். புதுச்சேரிஆதார் அட்டை உள்ள வீரர்கள் அனைவரும் போட்டிகளில் விளையாடலாம்.50 ஓவர் லீக் போட்டிகள் 1 -வது பிரிவு வீரர்களை கொண்ட 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்படும். ரெட், ப்ளூ, கிரீன், வயலட் என பெயரிடப்பட்டுள்ள இந்த அணியிலும் 3 கெஸ்ட் வீரர்கள் விளையாடலாம்.
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் விரைவில் நடத்தப்படும்.புதுச்சேரி சி.ஏ.பி. சங்கம் வரும் ஜனவரி முதல் அனைத்து பிரிவுகளிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டில் சுமார் 500 போட்டிகளை நடத்த உத்தேசித்துள்ளது. இதுதவிர சிறுவர்களுக்கான 4 அணிகள் கொண்ட 12 வயது, 14 வயது, 16 வயது, 19 வயது, 23 வயது மற்றும் சீனியர் பிரிவுகளுக்கு போட்டிகள் நடத்தப்படும்.இதேபோல பெண்களுக்கு 16 வயது, 19 வயது, 23 வயது, சீனியர் பிரிவுகளில் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X