தேனி:ஏ.டி.எம்.
கார்டு இன்றி ஆதார் மூலம் பணம் பெறும் வசதியை மக்களிடம் கொண்டு செல்ல
மாநிலம் முழுவதும் 3 மாதம் சிறப்பு முகாம் நடக்கிறது. .
வங்கி
ஏ.டி.எம். எண் விபரம் பெற்று ஆன்-லைன் மோசடி, பணம் எடுத்து தருவதாக
கூறி
ஏமாற்றுவது என மோசடிகள் அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர்க்க
தபால்துறை ஐ.பி.பி.வங்கியில் ஆதார் மூலம் பணம் பெறும் சேவை அறிமுகம்
செய்துள்ளனர். பல
கிராமங்களில் ஏ.டி.எம்., வங்கிகள் இல்லை. அனைத்து
கிராமங்களிலும் தபால் ஆபீஸ்,
தபால்காரர் செல்வார்கள். இத்
திட்டத்தில் பயன்பெற ஐ.பி.பி. வங்கியில் கணக்கு அவசியம் இல்லை.
வாடிக்கையாளர் வங்கி கணக்குடன் ஆதார் இணைத்து இருந்தால் போதும்.
தபால்காரிடம் முன்கூட்டியே பணம் தேவை என கூறினால் மறுநாள் மொபைல்
டிவைஸ் உடன் வீட்டிற்கு வந்து பணம் கோருபவரின் விரல் ரேகை பதிவு செய்து
ரூ.10 ஆயிரம் வரை வழங்குவார். இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை.
வாடிக்கையாளரிடம் எவ்வித பணமும் பிடித்தம் செய்வது இல்லை.
மாதம்
மூன்று முறை பணம் பெறலாம். இச் சேவையை நுாறுநாள் வேலைதிட்ட
பணியாளர்கள், முதியோர் உதவி தொகை பெறுவோர், ஓய்வூதியர்கள் எளிதாக
பெறலாம் என ஐ.பி.பி. வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE