தேவதானப்பட்டி:வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் நீர் திறக்கப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்களில் வாழும் விவசாயிகள்மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு 15 ஆண்டுக்கு முன்பு வரை வைகை அணையில் திறக்கப்பட்ட நீர்வைகை ஆற்றில் சென்றது.இதனால் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான வைகை புதுார், முதலக்கம்பட்டி, தாயமங்கலம்,சங்கரமூர்த்திபட்டி,
குள்ளப்புரம். அ.வாடிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, லட்சுமிபுரம்
உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து.
விவசாயப்பணிகள் நடைபெற்றது.
அதன் பிறகு வைகை-பேரணை இணைப்பு
கால்வாய் மூலம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றில்
நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.வைகை அணையில் 65 க்கு மேல் நீர்
தேங்கினால் மட்டும் வைகை ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. ஒரு
வருடத்திற்கு முன்பு வைகை ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு
ஆற்றில் நீர் திறக்கவில்லை.குறிப்பாக பிக்கப் அணையில் இருந்து
வெளியேறிய கசிவு நீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள்
மற்றும் கால்நடைகள் வளர்ப்போரும்கவலைப்பட்டனர்.
இந்நிலையில்
நேற்று முன்தினம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின்
பாசனத்திற்கு3 ஆயிரம் கன அடிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஆற்றில் நீர்
திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் வாழும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.