பொது செய்தி

இந்தியா

நரேந்திர மோடி, கிரண்பேடி பெயரில் கொய்யா செடிகள்

Added : நவ 11, 2019
Advertisement
 நரேந்திர மோடி, கிரண்பேடி பெயரில் கொய்யா செடிகள்

புதுச்சேரி:புதுச்சேரி இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி கண்டுபிடித்துள்ள ஆரஞ்சு மற்றும் சாக்லெட் சுவை கொண்ட கொய்யா செடி ரகங்களை, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடுகிறது.
புதுச்சேரி, கூடப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி, ஆராய்ச்சியின் மூலம், கனகாம்பரம் பூவில் பல நூறு வகையான செடிகளை கண்டுபிடித்து சாதனை படைத்தவர். இந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மகள் ஸ்ரீலட்சுமி. 31; எம்.பி.ஏ., பட்டதாரி.ஸ்ரீலட்சுமி, தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட, கொய்யா செடிகளை உருவாக்கியுள்ளார்.இதில், ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி பெயரிலும் இன்று 11ம் தேதி மதியம் 1.30 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுகிறது.
டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில், எம்.பி., நித்யானந்த்ராய், ஆரஞ்சு கொய்யா செடியையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும ஐ.ஐ.எச்.ஆர்., துணை கமிஷனர் ஜானகிராமன், சாக்லெட் கொய்யா செடியையும் வெளியிடு கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X