பொது செய்தி

தமிழ்நாடு

செங்கரும்பு விவசாயிகள் தீவிரம்

Added : நவ 11, 2019
Advertisement

சின்னமனுார்:சின்னமனுாரில் நடவு செய்யப்பட்டுள்ள செங்கரும்பு சோகை உறித்து, நீர் தேக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சின்னமனுார் பெரியாறு பாசன பரவில் 500 ஏக்கர் வரை செங்கரும்பு சாகுபடி நடந்தது. அறுவடை நேரத்தில் உரிய விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. கடந்த ஏப்ரலில் 300 ஏக்கர் பரப்பில் செங்கரும்பு நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் செங்கரும்பு தடிமனாக வளர்கிறது. முன் கூட்டி நடவு செய்யப்பட்ட செங்கரும்பில் சோகை உரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. வயல்களில் நீர் தேக்கப்பட்டுள்ளது.

செங்கரும்பு சாகுபடியாளர்கள் கூறுகையில், 'சபரிமலையில் மண்டல பூஜை சீசன் துவங்கும் போதே, சின்னமனுார் செங்கரும்பு விற்பனைக்கு வந்து விடும். டிசம்பர் இறுதியில் அறுவடை தீவிரமாக நடக்கும். கடந்தாண்டு மேலுார் பகுதியிலிருந்து குறைந்த விலையில் செங்கரும்பு விற்பனைக்கு வந்ததால், சின்னமனுார் கரும்புக்கு விலை கிடைக்கவில்லை. இந்தாண்டு
சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X