இந்தியா

நிரப்பப்படுமா? கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்... ஊர்காவல் படையினர் ஆவலுடன் காத்திருப்பு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019
Advertisement
 நிரப்பப்படுமா?  கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்... ஊர்காவல் படையினர் ஆவலுடன் காத்திருப்பு


புதுச்சேரி போலீஸ் துறையில் கடந்த 1995ம் ஆண்டு ஊர்க்காவல் படை வீரர் பிரிவு உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் அரசு ஊழியர்கள் தன்னார்வலர்களாக பணி புரிந்தனர். பின்னர், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், போலீசாருக்கு உறுதுணையாக 770 பேர் ஊர்காவல் படை வீரர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.
கடுமையான பணி
நகரில் போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக் கூட்டம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசாருக்கு இணையாக 24 மணி நேரமும் பணி செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு, போலீசாருக்கு இணையான சம்பளம் இல்லை. பிற சலுகைகளும் கிடையாது. அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு 'அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு மட்டுமே. இதன்படி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊர்க்காவல் படையினர், பிற துறைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக சீனியாரிட்டி அடிப்படையில் ஊர்க்காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் பிற துறையில் பதவி உயர்வு மூலம்சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன்படி போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு 25 சதவீதம், சிறை வார்டன் 50 சதவீதம், வாட்ச் வார்டன் 100 சதவீதம், பல்நோக்கு ஊழியர் 25 சதவீதம், வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணியில் 30 சதவீதம் ஊர்க்காவல் படை வீரர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இதில் முன்னோடியாக இருக்க வேண்டியவருவாய் துறை கடந்த சில ஆண்டுகளாக ஊர்காவல் படை வீரர்களை பணி நியமனம் செய்வதில் மவுனம் காத்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு 33 ஊர்காவல் படை வீரர்கள் பதவி உயர்வு பெற்று கிராம உதவியாளராக நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தற்போது ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இடஒதுக்கீடு ' வழங்கப்படவில்லை.
கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கின்ற கிராமஉதவியாளர்கள் பணியிடங்கள் 72 வரை தற்போது காலியாக உள்ளது.இருப்பினும் இந்த இடங்களை நிரப்பப்படவில்லை.இந்த காலி இடங்களில் 30 சதவீதம் ஊர்காவல் படை வீரர்களுக்கு வழங்கினால் காலியிடங்கள் நிரம்புவதோடு, வி.ஏ.ஓ.. அலுவலகங்களில் சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட ஆய்வு பணிகள் வேகமெடுக்கும்.
நிதி பிரச்னையா?
ஊர்காவல் படை வீரர்கள் ஏற்கனவே 24,000 ரூபாய் வரை சம்பளம் வாங்குவதால் கிராம உதவியாளர்களாக அவர்களை நியமிப்பதில் எந்தவித நிதி பிரச்னையும் இருக்கப்போவதில்லை. அலுவலக மேலாண்மை, மக்கள் தொடர்பு, கணிப்பொறி,கள ஆய்வு, ஒழுக்கம் எனஅனைத்து தகுதிகளும் இருப்பதால்,கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களாகவே இருக்கின்றனர். தற்போதுள்ள கிராம உதவியாளர் பணிக்கு காத்திருக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவருமே பட்டம் பெற்றவர்கள். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பிற துறை வாய்ப்புகளை வேண்டாம் என கூறிவிட்டு, கிராம உதவியாளர் பணிக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கிராம உதவியாளர் பணியிடங்களில் இவர்களுக்கான 30 சதவீத இடங்களை நிரப்பி, அவர்களுக்கு எதிர்காலத்திற்குஅரசு வழி காட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X