ஜார்க்கண்ட் தேர்தல்: பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

Added : நவ 11, 2019
Share
Advertisement

புதுடில்லி:ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ. சார்பில் போட்டியிடும் 52 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.



latest tamil news


ஜார்க்கண்டில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு நவ.30ல் துவங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ. சார்பில் போட்டியிடும் 52 பேர் அடங்கிய முதல்
வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலானோர் முதல் கட்ட தேர்தலில்
போட்டியிடுபவர்கள். பட்டியலை வெளியிட்டு பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி.நட்டா
கூறியதாவது:ஜார்க்கண்ட் தேர்தல் களம் பா.ஜ.வுக்கு சாதகமாக உள்ளது. ஜார்க்கண்டில் பா.ஜ. அல்லாத கட்சிகளின் ஆட்சி நடக்கும்போது அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் பா.ஜ. ஆட்சி அமைந்த பின் ஊழலே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிலையான ஆட்சி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது.ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவாவும் ஓட்டுகள் டிசம்பர் 23ல் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X