பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவன் சுஜீத் தாய்க்கு அரசு வேலை; கலெக்டர் தகவல்

Added : நவ 11, 2019 | கருத்துகள் (51)
Advertisement

திருச்சி:ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜீத் வில்சன் தாய்க்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ம் தேதி பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாராணி தம்பதியின் இளையமகன் சுஜீத் வில்சன் 2 அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.ஐந்து நாட்கள் நடந்த மீட்புப்பணி முடிவில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
அரசு மற்றும் அ.தி.மு.க. - தி.மு.க. - காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் சார்பில்
வழங்கப்பட்டது.

சுஜீத் பெற்றோர் சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் அரசு வேலை கோரிக்கை குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில் ''சுஜீத்தின் தாய் கலாராணி பிளஸ் 2 வரை படித்துள்ளார். அவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
11-நவ-201917:03:41 IST Report Abuse
Girija விபத்தில் இருப்பவர்களுக்கு அரசு ஒரு லட்சம் தருவது என்பதை இந்த விஷயத்திலும் பின்பற்றி கூடுதலாகி கொடுத்த ஒன்பது லட்சத்தை அதிமுக அரசுக்கு திருப்பி தரவேண்டும் என்பதை கோர்ட் எடுத்துரைக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
11-நவ-201915:16:12 IST Report Abuse
narayanan iyer அவர்களின் நிலத்தில் அவர்களால் அனுமதியில்லாமல் உண்டாக்கிய ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை . அதில் விழுந்த குழந்தை இறந்தது .அந்த பெற்றோரை ஏற்கனவே கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது இந்த அரசு . அதுவும் இல்லாமல் அரசுவேலையாம் வெட்கமில்லை அவர்களுக்கு நிலம் இருக்கிறது , இப்போ பணமும் இருக்கு பின்னர் எதுக்கு அரசு வேலை? ஏன் என்றால் அவர்கள் முற்படுத்தப்பட்ட ஜாதியில்லை . பேனர் விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இந்த அரசும் , எதிர்க்கட்சியும் செய்தது என்ன ? சே என்ன நாடு ? என்ன அரசு?
Rate this:
Share this comment
Cancel
11-நவ-201912:26:44 IST Report Abuse
Ganesan Madurai ஒரு தகுதியான இளைஞரின் வாய்ப்பு சட்டப்படி கிறிஸ்தவ ஓட்டுக்காக மறுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
11-நவ-201915:16:38 IST Report Abuse
s.rajagopalanஇந்த கூத்திற்கு முடிவே கிடையாதா ? சுஜித் குடும்பத்திற்கு சம்பாதித்து சோறு போட்டுக்கொண்டிருந்தானா ? ஒட்டு வங்கியின் அவலம் தெள்ள தெளிவாக தெரிகிறது ...கேவலம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X