பொது செய்தி

இந்தியா

மழைக்கு உதவாத பயணிகள் நிழற்குடை

Added : நவ 11, 2019
Advertisement
 மழைக்கு உதவாத பயணிகள் நிழற்குடை

புதுச்சேரி:மரப்பாலம் பயணியர் நிழற்குடை மழைக்கு உதவாமல் பாழடைந்து கிடக்கிறது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் வாய்ந்த இடமாக மரப்பாலம் சந்திப்பு உள்ளது. பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்கு வசதியாக கடலுார் சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் மேற்கூரை கந்தலாகி தொங்குகிறது. அதில் இருந்த இருக்கைகள் திருடு போனது. கந்தலாகி கிடக்கும் இந்த நிழற்குடை செடி, கொடிகள் படர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.இதனால், பயணிகள் மரப்பாலம் சிக்னலில் துணை மின் நிலையம் எதிரே நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க, கடலுார் சாலையில் உள்ள கந்தலாகி கிடக்கும் பயணிகள் நிழற்குடை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்கவும், பஸ்கள் அங்கு நின்று பயணிகள் ஏற்றி, இறக்கிட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X