மாணவியர் வச்ச குறி தப்பவில்லை! கேரம் விளையாட்டில் மீண்டும் நிரூபணம்

Added : நவ 11, 2019
Advertisement

கோவை:கோவை வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.கோவை பள்ளி கல்வித்துறையின் சார்பில், கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான கேரம் போட்டி, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி வளாகத்தில் நடந்தது. 11 குறுமையங்களிலிருந்து, 14, 17, 19 வயது மாணவ, மாணவியர் பிரிவில், தலா 33 அணியினர் பங்கேற்றனர்.மாணவர் பிரிவு14 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், ஹோலிபேமிலி கான்வென்ட் பள்ளி, பீளமேடு மாநகராட்சி பள்ளி; 17 வயது பிரிவில், விவேகானந்தா கல்வி நிலையம், பீளமேடு மாநகராட்சி பள்ளி; 19 வயது பிரிவில், வாசவி வித்யாலயா பள்ளி, சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவு14 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், கிருஷ்ணம்மாள் பள்ளி, ராமகிருஷ்ணபுரம் மாநகராட்சி பள்ளி; 17 வயது பிரிவு சுண்டாக்கமுத்துார் அரசு பள்ளி, கணபதி அரசு பள்ளி; 19 வயது பிரிவு ஒப்பணக்கார வீதி அரசு பள்ளி, கிருஷ்ணம்மாள் பள்ளி அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.முதலிடம் பெற்ற பள்ளி அணிகள் மட்டும், மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X