பொது செய்தி

இந்தியா

பனையடிக்குப்பம் ஏரியில் மரம் வளர்க்க நடவடிக்கை தேவை

Added : நவ 11, 2019
Share
Advertisement

நெட்டப்பாக்கம்:பனையடிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையை சுற்றி மரம் நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பனையடிக்குப்பம் ஏரிக்கரை 50 ஏக்கர் நிலபரப்பை கொண்டது. இந்த ஏரிக்கரையில் மழைக்காலங்களில் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், பெண்ணையாற்றில் இருந்து வரும் உபரி நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் மூலம் அப்பகுதியில் உள்ள விலை நிலங்களுக்கு பாசனத்திற்கு நீர் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் இந்த ஏரிக்கரை ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மீன் குத்தகை மூலம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு கணிசமான தொகை கிடைக்கிறது.இவ்வளவு முக்கியத்துவம் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்தும் வகையில் கரைகளை சுற்றி மரங்கள் இல்லை.
இதனால் மழைக்காலத்தில் கரை அரிக்கும் அபாயமும் உள்ளது. பெரும்பாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் ஏரிக்கரையை சுற்றி மரங்கள் வளர்த்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கலாம்.பாகூர், நல்லுார்,வாதானுார், ஊசுட்டேரி போன்ற ஏரிகளில் ஏரியை சுற்றியும் புளியமரம், கொண்றை மரம், நாவல் மரம், பனை மரம் என பலமரங்கள் வளர்க்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதோடு கணிசமான வருவாய் அரசுக்கு கிடைக்கிறது.அதேபோல் பனையடிக்குப்பம் ஏரிக்கரையை சுற்றிலும் மரங்கள் வளர்க்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X