மாநில ஐவர் கால்பந்து போட்டி: டிராக் போர்ஸ் அணி வெற்றி

Added : நவ 11, 2019
Share
Advertisement

கோவை:'டிரீம் லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்' நடத்தும், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, செல்வபுரம் கிராஸ் பார் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் செயற்கை புல்வெளி தளத்தில் நேற்று நடந்தது.வீரர்களுக்கான, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 48 அணிகள் பங்கேற்றன.19 வயதுக்கு உட்பட்ட காலியிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், நேரு கல்லுாரி அணி, 1-0 தரவாடி எப்.சி., அணியையும்; 2வது போட்டியில் லிட்டில் ஸ்டார் எப்.சி., 4-3 அணி, திருப்பூர் சப்-ஜூனியர் அணியை வென்றது.17 வயதுக்கு உட்பட்ட டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 8-0 என்ற கோல் கணக்கில், கோல் பிளஸ்டர்ஸ் அணியையும்; 2வது போட்டியில், தரவாடி எப்.சி., அணி, 3-2 புளியகுளம் எப்.சி., அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X