மாணவர்களை அச்சுறுத்தும் மின் கம்பிகள் சரி செய்யப்படுமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவர்களை அச்சுறுத்தும் மின் கம்பிகள் சரி செய்யப்படுமா?

Added : நவ 11, 2019
Share
புதுச்சேரி:முதலியார்பேட்டையில்பள்ளி மாணவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்மின்கம்பிகளை சரி செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதலியார்பேட்டை வள்ளலார் கோவில் எதிரில் ஜெகநாத படையாட்சி வீதி நுழைவு வாயில் அருகே உள்ளகால்வாய் நீண்ட காலமாக மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. மேலும், கால்வாய்க்கு அருகில் திறந்த வெளியில் மின் கம்பத்தில் மின்
 மாணவர்களை அச்சுறுத்தும் மின் கம்பிகள் சரி செய்யப்படுமா?

புதுச்சேரி:முதலியார்பேட்டையில்பள்ளி மாணவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்மின்கம்பிகளை சரி செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலியார்பேட்டை வள்ளலார் கோவில் எதிரில் ஜெகநாத படையாட்சி வீதி நுழைவு வாயில் அருகே உள்ளகால்வாய் நீண்ட காலமாக மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. மேலும், கால்வாய்க்கு அருகில் திறந்த வெளியில் மின் கம்பத்தில் மின் கம்பிகளின் இணைப்புகள் சாலை மட்டத்தில் உள்ளது.இந்த கால்வாய் வழியாக பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர். கவனக்குறைவான தொட்டாலும், நடந்தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.இந்த ஆபத்தான கால்வாயை பொதுப்பணித் துறைசிலாப் போட்டு மூடுவதற்கும், வெளியே தெரியும் மின்கம்பிகளை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைக்க மின் துறையும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X