தேசிய டென்னிஸ் வீரர்கள் அசத்தல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

கோவை:தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில், கர்நாடகாவின் எஸ்காஸ், அனுப் கேசவமூர்த்தி ஜோடி அணி, முதலிடத்தை பிடித்தது.கோவை, வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் குழு சார்பில், தேசிய அளவிலான 'ரேங்கிங் டென்னிஸ்' காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் டென்னிஸ் கோர்ட்டில் நடந்தது. வீரர், வீராங்கனைகளுக்கான, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இரட்டையர் பிரிவு: 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி, கர்நாடகாவின் எஸ்காஸ், அனுப் கேசவமூர்த்தி ஜோடி அணி, 1-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில், தமிழ்நாட்டின் ஜெய்ஷ்ணு கிருஷ்ணன், சித்தார்த் கவுதமன் ஜோடி அணியை வென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X