விரக்தியில் விவசாயி துாக்கு போட்டு தற்கொலை

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:உடல்நிலை பாதித்ததால் விரக்தியடைந்த விவசாயி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாகூர் மருத்துவமனை, சாலையை சேர்ந்தவர் விநாயகம்,69; விவசாயி. இவருக்கு வேல்முருகன் என்ற மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.விநாயகத்தின் மனைவி சில ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த விநாயகம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் குணமாகவில்லை.அதில் விரக்தியடைந்த விநாயகம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X