பொது செய்தி

தமிழ்நாடு

உருவாகுது புது மருத்துவமனை: பிரசவம் பார்க்க பிரச்னையில்லை 

Added : நவ 11, 2019
Advertisement

கோவை:கோவை, பாப்பநாயக்கன்புதுார், கோகுலம் காலனியில் ரூ.75 லட்சத்தில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது.கோவை மாநகராட்சி சார்பில், 23 மகப்பேறு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன. இதில், கோகுலம் காலனியில் உள்ள மருத்துவமனையில் போதிய வசதி இல்லாமல் இருந்தது.கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கும் வகையில், அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க, சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தினர்.முதலில், 26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்திய வசதிகள் செய்வதற்கு, கூடுதல் நிதி தேவைப்பட்டது. மாநகராட்சி பொது நிதியில் ரூ.49 லட்சம் ஒதுக்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்படுகிறது.தற்காலிகமாக, மாநகராட்சி பள்ளி வளாகத்தில், இரு வகுப்பறைகளில் மருத்துவமனை செயல்படுகிறது. ஆரம்ப கட்ட சிகிச்சை அளிப்பதோடு, மருந்து, மாத்திரை மட்டும் வழங்கப்படுகிறது.பிரசவம் பார்ப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். இப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், வகுப்பறையில் மருத்துவமனை செயல்படுவதை பார்த்து, காரணத்தை கேட்டறிந்தார்.மருத்துவமனை கட்டும் இடத்துக்குச் சென்று, பணிகளை பார்வையிட்ட அவர், டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X