சுரங்கப்பாதையில் தேங்கும் நீரால் போக்குவரத்திற்கு பாதிப்பு

Added : நவ 11, 2019
Share
Advertisement

ஆண்டிபட்டி:சுரங்கப்பாதை ரோட்டில் தேங்கும் நீரை வெளியேற்ற ரயில்வே நிர்வாகம்
நடவடிக்கை எடுக்காததால் ஆண்டிபட்டியில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மழை நேரத்தில் கடந்து செல்ல தவிக்கின்றனர்.
மதுரை -- போடி அகல ரயில் பாதை திட்டத்தில் ஆண்டிபட்டி - மேக்கிழார்பட்டி, ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில், எஸ்.எஸ்.புரம் - கரிசல்பட்டி ரோடுகளில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை வசதி இல்லை. மழை காலத்தில் இப்பகுதி வழியாக வரும் மழை நீர் சுரங்கப்பாதையில் தேங்கி விடுகிறது.

கன மழை நேரத்தில் மூன்று முதல் நான்கு அடி வரை நீர் தேங்கி விடுவதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சுரங்கப்பாதை நீரில் இறங்கி கடக்கவும் முடியவில்லை. ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோட்டில் உள்ள சுரங்கப்பாதையில்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு நேரத்தில் ரயில்வே துறையினர் யாரும் இப்பகுதிக்கு வருவதும் இல்லை. நீரை வெளியேற்றி விடுவதற்கான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மழை நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. ஆண்டிபட்டி போலீசார், ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் சரிசெய்து செல்கின்றனர்.
பல மாதங்களாக தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் ரயில்வே துறைக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X