பொது செய்தி

தமிழ்நாடு

வெரிக்கோஸ் வெயின் பாதிப்புக்கு தீர்வு: அரசு மருத்துவமனையில் 42 பேருக்கு தீர்ந்தது நோவு

Added : நவ 11, 2019
Advertisement
 வெரிக்கோஸ் வெயின் பாதிப்புக்கு தீர்வு: அரசு மருத்துவமனையில் 42 பேருக்கு தீர்ந்தது நோவு

கோவை:கடந்த ஆறு மாதங்களில், 42 பேருக்கு வாஸ்குலார் அறுவை சிகிச்சைகளை, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.நீண்ட நேரம் நின்றபடியே பணி செய்பவர்களுக்கு ஏற்படும் நோய், வெரிக்கோஸ் வெயின். இந்நோய் ஏற்பட்டால், காலில் தாங்க முடியாத வலி, வீக்கம், ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும். இத்தகைய வெரிக்கோஸ் வெயின் நோய்க்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்து வந்தது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே, ரேடியோ அதிர்வலைகள் மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்பம், கோவை அரசு மருத்துவமனையில் இந்தாண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பல்வேறு நபர்களுக்கு, இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.கடந்த ஆறு மாதங்களில், 'ரேடியோ பிரீக்குவன்சி அப்ளேஷன்' மற்றும் 'ஸ்கெலிரோதெரபி' எனும் இரு அறுவை சிகிச்சை முறைகள் மூலம், 42 பேருக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:வெரிக்கோஸ்வெயின் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும், 'ரேடிரோ பிரீக்குவன்சி அப்ளேஷன்' மற்றும் 'ஸ்கெலிரோதெரபி' எனும் சிகிச்சைகள், அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன.இதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில், பிரத்யேக கருவி பொருத்தப்பட்டு துல்லியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர்.கடந்த ஆறு மாதங்களில், இவ்விரு சிகிச்சைகள் வாயிலாக, 42 பேருக்கு தீர்வு கிடைத்துள்ளது. நீண்ட நேரம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து கொள்வது நல்லது.அதேபோல் துாங் கும் போது கால்களுக்கு அடியில் தலையணை வைத்து, உயரமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால், வெரிக்கோஸ்வெயின் வராமல் தடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நீண்ட நேரம் நின்றபடியே பணி செய்பவர்களுக்கு ஏற்படும் நோய், வெரிக்கோஸ் வெயின். இந்நோய் ஏற்பட்டால், காலில் தாங்க முடியாத வலி, வீக்கம், ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X