மனைவி பிரிந்து சென்ற சோகம் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:மனைவி பிரிந்து சென்ற வேதனையில், ஓட்டல் தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்தவர் ரவி,52; இவரது மனைவி மூன்று ஆண்டிற்கு முன் பிரிந்து சென்றுவிட்டார்.அதனையொட்டி கடந்த 6 மாதத்திற்கு முன், தனது நான்கரை வயது மகளுடன் புதுச்சேரி வந்த ரவி, மகளை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, முதலியார்பேட்டை பாரதி மில் திட்டு பகுதியில், தமிழரசன் என்பர் வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி, ஓட்டலில் வேலை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ரவி, வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வாடகை வசூலிப்பதிற்காக, வீட்டின் உரிமையாளர் தமிழரசன் மாடிக்கு சென்றபோது, துர்நாற்றம் வீசியது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது, ரவி அழுகிய நிலையில் துாக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து, முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X