புதுச்சேரி:மத்திய அரசின் திட்டமான 'சுத்தம்- நிர்மலம் கடற்கரை அபியான்' கீழ் புதுச்சேரியில் கடற்கரை துாய்மை படுத்தும் இயக்கம் இன்று துவங்குகிறது.
மத்திய சுற்றுச்சூழ்ல வன மற்றும் காலநிலை மாற்றம், ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை சங்கம் இணைந்து, கடற்கரை பகுதியை துாய்மை படுத்தும் இயக்கத்தை (சுத்தம்- நிர்மலம் கடற்கரை அபியான் திட்டம்) இன்று முதல் 17ம் தேதி வரையில் பள்ளி மாணவர்களை கொண்டு நடத்துகிறது. நாட்டில், 9 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்இத்திட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் ஒன்று.. இத்திட்டத்திற்காக மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம். புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றத்திற்கு ரூ. 20.55 லட்சம் நிதியுதவி வழங்யுள்ளது.இத்திட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தினமும் இரண்டு மணி நேரம் துாய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்படஉள்ளது.புதுச்சேரி கடற்கரையில் காலை 7:00 மணிக்கு, கடற்கரை துாய்மை படுத்தும் இயக்கத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி துவக்கி வைக்கிறார்.இப்பணியில் தினமும் அரசு பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.இத்திட்டத்தில் கடற்கரை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், மறுசுழற்சி செய்பவர்கள் மூலம் அகற்றப்படுகிறது. கடற்கரையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE