பொது செய்தி

இந்தியா

முதல்வர் நாராயணசாமிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நன்றி

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:விழாக்கால உதவித் தொகை உயர்த்தி கொடுத்த முதல்வர் நாராயணசாமிக்கு, முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
.புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் செயற்குழு கூட்டம், கொட்டுப்பாளையத்தில் உள்ள லீக் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மோகன் தலைமை தாங்கி, தலைமை செயலகத்தில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறையின் ஆண்டு கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பேசினார்.கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் கோரிக்கையை ஏற்று, ஆண்டு தோறும் வழங்கப்படும் விழாக்கால ஊக்கத் தொகையை ரூ. 3000 த்தில் இருந்து ரூ. 4000 மாக உயர்த்திய முதல்வர் நாராயணசாமி, பரிந்துரை செய்த அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் மற்றும் நலத்துறை இயக்குனருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும், ஈமச்சடங்கு உதவித்தொகை, ஓய்வூதியம் இல்லாத முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்களுக்கு முப்படை நலவரியம் மூலம் அளித்துவரும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை உயர்த்தி கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மூத்த துணைத்தலைவர் ஜோதிகுமார், துணைத்தலைவர் வீரமணி, பொதுச்செயலர் செல்வமணி மற்றும் ராமநாதன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X