கால்பந்து போட்டியில் வேடசந்தூர் பள்ளி வெற்றி

Added : நவ 11, 2019
Advertisement

வேடசந்துார்:மாவட்ட கால்பந்து போட்டியில் வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்ற
வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர்.

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற வேடசந்துார் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். மாணவி கீர்த்தனா உயரம் தாண்டுதல், 100 மீ., ஓட்டம், தடை தாண்டுதலில் முதலிடம் பெற்றார். இதனால் மாவட்ட சாம்பியன்ஷிப் பெற்றார்.மாணவி வின்சியா 200 மீ., ஓட்டத்தில் முதலிடம், மாணவி சகானா போன்சி உயரம் தாண்டுதலில் 2ம் இடம் பெற்றனர்.

மேலும் மாணவிகள் மல்லீஸ்வரி, கவிதா, காளீஸ்வரி, சவுந்தர்யா உள்பட 18 பேர் போட்டிகளில் 2ம் இடம் பெற்றனர். மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியர் நாகராணி மற்றும் பலர்
பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X