தமிழ்நாடு

கூட்டணி கட்சியினர் 'குடுமிப்பிடி' மேயர் பதவி யாருக்கு?வார்டு பிரிப்பில் துவங்கியது போட்டி

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கூட்டணி கட்சியினர் 'குடுமிப்பிடி' மேயர் பதவி யாருக்கு?வார்டு பிரிப்பில் துவங்கியது போட்டி

கோவை:உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை மேயர் பதவிக்கு அ.தி.மு.க., கூட்டணியில், அ.தி.மு.க.,-பா.ஜ., கட்சியினரும், தி.மு.க., கூட்டணியில், தி.மு.க.,- காங்., கட்சியினரும், மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு நடந்த எம்.பி., தேர்தல், அதை தொடர்ந்த இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில், தமிழக அரசியல் கூட்டணிகளில், பெரிய அளவில் மாற்றம் இல்லை. வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும், அதே கூட்டணிகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவை மாநகரில், 2011 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு, மேயர் பதவியை கைப்பற்றியது. எதிர்த்து தி.மு.க.,- ம.தி.மு.க.,- மார்க்சிஸ்ட்- காங்.,-பா.ஜ., கட்சிகள் சார்பில், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
எனினும், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்கை காட்டிலும், 1,30,000 ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் வேலுச்சாமி வென்றார்.தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., வேட்பாளரே வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட. பா.ஜ.,- மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் குறைந்த ஓட்டுகளையே பெற்றனர்.பா.ஜ.,வும் கேட்கிறதுஇந்த முறை அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருக்கிறது.
அவர்களும் கோவை மேயர் பதவியை வலியுறுத்தி கேட்க திட்டமிட்டுள்ளனர்.அ.தி.மு.க.,வினர் விட்டுக் கொடுக்க வாய்ப்பு மிக குறைவு. ஏதாவது வார்டில் போட்டியிடும் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில், தே.மு.தி.க., உள்ளது.தி.மு.க., கூட்டணியில், காங்., கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க., இருக்கின்றன. காங்., கட்சியினர், கடந்த காலத்தில் மேயர் பதவி வகித்துள்ளதால், அவர்களும் வாய்ப்பு கேட்பர்.மார்க்சிஸ்ட் கட்சியினர், கடைசியாக நடந்த 2 மேயர் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளனர்; பெயரளவுக்காவது அவர்களும் கேட்கவே செய்வர்.
வார்டு பிரிப்பில் 'வெப்பம்''வார்டுகளை பிரித்துக் கொள்வதில், இரு கூட்டணிகளிலும், மோதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர், அரசியல் கட்சியினர்.பிரதான கூட்டணிகளை தவிர, நடிகர் கமல் நடத்தும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சியினரும், இந்த முறை மேயர் தேர்தலில், களம் இறங்க உள்ளனர்.அ.தி.மு.க.,வில் வரும் 15, 16ல் போட்டியிடுவோரிடம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வாங்க உள்ளனர்.
தி.மு.க.,வில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இப்படி, கோவை அரசியல் கட்சியினர் மத்தியில், உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது.அமைச்சர் முடிவு!'கோவை அ.தி.மு.க.,வில், உள்ளாட்சித்துறை அமைச்சரின் முடிவே இறுதியானது என்பதால், மேயர் பதவிக்கு போட்டி எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
கவுன்சிலர் பதவிக்குத்தான் கடும் போட்டி இருக்கும்; கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்க முட்டி மோதுவர்' என்கின்றனர் கட்சியினர்.'எம்.பி., தேர்தல் வெற்றியால், தி.மு.க.,வினரும் உற்சாகத்தில் உள்ளனர். எனவே, மேயர் பதவிக்கு சீட் பெறவும், கவுன்சிலர் பதவிக்கு சீட் பெறவும், கடும் போட்டி நிலவும்' என்கின்றனர், நிர்வாகிகள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
13-நவ-201907:32:29 IST Report Abuse
s.maria alphonse pandian கழகங்களில் அதிகம் கப்பம் கட்டுவோருக்கே சீட்டு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X