பொது செய்தி

தமிழ்நாடு

இந்த வாரம்...ஆரவாரம்...! 

Added : நவ 11, 2019
Advertisement

நவ.,11: பிரம்ம சூத்திரம்'நான்' என்ற ஜீவாத்மாவும், பரம்பொருளும் இரண்டற கலந்தது. பிரம்மத்துடனான தொடர்பை அறிய,பரம்பொருளை விளக்கும் பிரம்ம சூத்திரத்தை அறிந்துகொள்வோம். ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், பிரம்ம சூத்திரம் குறித்த சிறப்பு சொற்பொழிவு, காலை, 11:00 மணி முதல் நடக்கிறது.

நவ.,12: அரவான் திருவிழாகுறிச்சி அரவான் திருவிழா, நவ.,12ம் (நாளை) தேதி துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு, குறிச்சி முதுப்பார் கோவிலில் பூஜை முடித்து விழா ஆரம்பம், ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூசாத்துதல் நடக்கும். வரும் 22ம் தேதி வரை நடக்கும் விழாவில், அரவான் சிறப்பு பூஜை, அரவான் எழுந்தருளல், அரவான் பொங்கியம்மன் திருமண விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நவ.,12: லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்சத்குரு சேவாஸ்ரமம் சார்பில், சிவஞான லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அபிஷேகம், மாலை, 6:30 மணிக்கு, அலங்காரம் நடக்கிறது. அரச்சனை, அவதாரிகை, ஆசீர்வாதம், மாலை, 7:00 மணி முதலும், அன்னதானம், மாலை, 7:45 மணிக்கும் நடக்கிறது.

நவ.,16: இலக்கிய கூட்டம்தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், 337வது இலக்கிய கூட்டம் நடக்கிறது. வெளிநாட்டு பயண அனுபவங்கள் குறித்த, 'இருப்பின் இனிப்பு (பித்தன்)' எனும் புதிய நுால் அறிமுகம் செய்யப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் விழாவில், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

நவ.,17: பகவத்கீதைகடலில் ஆறுகள் அடங்குவது போல், ஆசைகள் ஒடுங்குபவனே, மனைஅமைதி பெற்று, நிறைவாழ்வு வாழ்வான் என, போதிக்கும் பகவத்கீதை வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. ஸ்ரீ சாய் துவாரகா டிரஸ்ட் சார்பில், பகவத்கீதை சொற்பொழிவு மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.

நவ.,17: ஓவியப் போட்டிகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடக்கின்றன. ஓவியப்போட்டிக்கான தலைப்பு போட்டியின்போது அறிவிக்கப்படும். போட்டியில் பங்கேற்க பதிவு செய்வது அவசியம்.

நவ.,17: உணவும் உழவும்சீரகம் அமைப்பு சார்பில் உணவும் உழவும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. நம் உடலை உருவாக்கும் உணவை பற்றியும், உணவை உருவாக்கும் உழவைப் பற்றியும் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை விளக்கமளிக்கப்படுகிறது. இலவச கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, பதிவு செய்வது அவசியம்.

நவ.,17: குழந்தைகளுக்கான மராத்தான்எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில், குழந்தைகளுக்கான மராத்தான் போட்டி நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் யு.கே.ஜி., வரை, ஒரு கி.மீ., மற்றும் முதலாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை, ஒன்றரை கி.மீ.,க்கும் போட்டிகள் நடக்கின்றன. காலை, 6:00 மணிக்கு துவங்கும் போட்டிக்கு, முன்பதிவு செய்வது அவசியம். அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X