டூவீலர்களில் ஜாலியாக வரும் பள்ளி மாணவர்கள்

Added : நவ 11, 2019
Advertisement

பழநி:பழநியில் இருசக்கர வாகனங்களில் ஜாலியாக வலம் வரும் பள்ளி மாணவர்களால் விபத்து அபாயம் உள்ளது.
பழநி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளம் உள்ளன. இங்கு பயிலும்
மாணவர்களில் சிலர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். பள்ளி முடிந்ததும்
நண்பர்களுடன் ஒரே வாகனத்தில் மூவர் வரை செல்கின்றனர்.மாலை நேரங்களில்
பஸ்ஸ்டாண்ட் உள்பட நெரிசலான பகுதிகளில் விரைவகவும், ஜாலியாகவும்ஹெல்மெட் அணியாமலும் வலம் வருகின்றனர்.

வாகனத்தை சரியாக இயக்க தெரியாமல் நடந்துசெல்வோர் மீது மோதுவது போல் செல்வது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்வது என நடந்து கொள்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்கள் மோட்டார் வாகனங்களை பயன்படுத்த பள்ளி
நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். பெற்றோரும் இதை அனுமதிக்க கூடாது. இத்தகைய மாணவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்தால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதுடன், எச்சரிக்கையும் செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X