பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையில் இருக்கா உணவு

Added : நவ 11, 2019
Advertisement
  குப்பையில் இருக்கா உணவு

குப்பையில் இருக்கா உணவு'தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் பாரதி. ஆனால், ஒரு வேளை சோற்றுக்காக மனிதன் கை ஏந்தும் நிலை இன்றும் காணப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில், குப்பை தொட்டி ஒன்றில், காலி மதுபாட்டில்கள் உடன் கிடந்த எச்சில் உணவை, முதியவர் ஒருவர் நேற்று காலை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
உணவுக்காக உலகை அழிக்க நினைத்த பாரதி எங்கே. மதுவினால் இன்று மாண்டு வரும் மனிதகுலம் எங்கே? மேம்பாலத்தில் அருவி!புதிதாக கட்டப்பட்டுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து, கீழே வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் மீது நேற்று தண்ணீர் அருவி போல் கொட்டியது. தொப்பல் தொப்பலாக நனையும் வாகன ஓட்டிகள், பாலம் கட்டியவர்களை, வசைபாடியபடி செல்கின்றனர். தண்ணீரில் நனையாமல் இருக்க, ஒரு பெரியவர் நேற்று திடீரென வாகனத்தை திருப்பியதால், பின்னால் சென்ற வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய பெரியவர், 'விசேஷத்துக்கு போகலாம் என, நல்ல ஆடை உடுத்தி வந்தேன், இப்படி ஆயிருச்சே' என, புலம்பியபடி நகர்ந்தார்.பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சிதமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, கிணத்துக்கடவு, கோதாவாடி பிரிவில்உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடக்கிறது. இதில், பலவகை பழஜாம், பழரசம் தயாரிப்பு குறித்து பயிற்சிஅளிக்கப்படுகிறது, பயிற்சி கட்டணம், ரூ.750 மட்டுமே. மேலும் விபரங்களுக்கு, 0422 - 6611268 என்ற எண்ணில் அழைக்கலாம்.பொதுமக்கள் ஏமாற்றம் அயோத்தி வழக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் இருக்கும் பூங்காக்கள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டுள்ளன. கோவை வ.உ.சி., உயிரியல் பூங்கா, மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா, சிறுவர் பூங்காவுக்கு நேற்று பொழுதுபோக்க வந்திருந்த ஏராளமானோர், ஏமாற்றத்துடன்திரும்பிச்சென்றனர்.
அழகாகிறது கலெக்டரேட்கோவை
கலெக்டர் அலுவலகத்தில் இருந்த இரு சக்கர வாகன 'பார்க்கிங்' இரண்டும், நேற்று காலை இடித்து அகற்றப்பட்டன. வளாகத்தின் பின்புறம் இருக்கும் பயன்படுத்தப்படாத கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு வாகன 'பார்க்கிங்' அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.பாதியில் முடியும் பயணம்கடந்த சில நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேரூர், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்கள் ஆபத்தை உணராமல், இருசக்கர வாகனங்களில் ஆற்றை கடக்க முயற்சிக்கின்றனர். பாதி வழியில் வாகனம் நின்று விடுவதால், நீந்தி செல்கின்றனர்.
மேம்பாலத்தின் பயன்!
காந்திபுரம் பகுதியில், நேற்று திடீரென மழை கொட்டத்துவங்கியது. இதை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள், புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் ஒதுங்கினர். நீண்ட துாரம் வாகன ஓட்டிகள் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைக்காக ஒதுங்கியிருந்த வாகன ஓட்டி ஒருவர், 'இந்த பாலம் கட்டுனதால எந்த நன்மையும் இல்லைன்னு சொல்ல முடியாது. மழை பெய்தா ஒதுங்குறதுக்கு பயன்படுதுல்ல' என கிண்டலடிக்க, அருகில் இருந்தவர் அவரை முறைத்தார்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X