புதுச்சேரி:காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில், இந்திய அரசின் ஆதார் அட்டை வைத்திருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த முதியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, பெரியக்காலாப்பட்டு காங்., பிரமுகர் சந்திரசேகர் கொலைக்கு பின்சுனாமி குடியிருப்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், வௌியூரில் இருந்து வந்து தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். அதன்படி நேற்று சுனாமி குடியிருப்பு -டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவரது பெயர் மோசஸ் ஆயின்ட், 71; நைரீஜியாவை சேர்ந்தவர் என்று தனது ஆவணங்களை காட்டினார். அதனை சரிபார்த்தபோது, இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதார் கார்டை அவரது பெயரில் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், மோசஸ் ஆயின்ட், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருவதும், தற்போது பெரியகாலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் தங்கி, புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நைஜீரியாவை சேர்ந்த மோசஸ் ஆயின்ட், சில மாதங்களுக்கு முன் சுனாமி குடியிருப்பிற்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஆதர்கார்டு பெற்றிருந்த அவர், தற்போது புதுச்சேரிக்கு வந்ததும், முகவரி மாற்றம் செய்துள்ளார். அவரிடம் ஆதார்கார்டை தவிர்த்த நமது நாட்டு ஆவணங்கள் எதுமில்லை. இருப்பினும், அவர் இந்திய குடிமகனாக மாறிவிட்டாரா...அவர்சட்டப்படி தான்ஆதார் கார்டு பெற்றாரா என்பதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE