விமர்சித்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமர்சித்தவர் கைது

Added : நவ 11, 2019
Share

கொடைக்கானல்:கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் விக்ரம்செந்தில் 42, அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர் கூட்டுறவு வங்கி நிர்வாகியாக உள்ளார்.

கொடைக்கானல் இந்திராநகரை சேர்ந்தவர் லியோசாம்ராஜ் 40, தி.மு.க.,வை சேர்ந்தவர்.
இவர்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவாதம் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். விவாதம் முற்றவே விக்ரம்செந்தில், ஜாதியை பதிவிட்டு லியோசாம்ராஜை விமர்சித்தார்.
போலீசார் விக்ரம்செந்திலை கைது செய்தனர்.

பழநி: பழநி நெய்காரப்பட்டி கேவேலுாரை சேர்ந்தவர் தண்டபாணி 63. இவர் அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது ரோந்து சென்ற தாலுகா போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X