பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகளுக்கு ஆலோசனை வழங்க...

Added : நவ 11, 2019
Advertisement

சிறையில் உள்ள கைதிகள் 'வீடியோ' அழைப்பு மூலம் உறவினர்களுடன் பேசும் வசதி, கோவை மத்திய சிறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என, 1,850 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளனர். வாரந்தோறும் கைதிகளை அவர்களின் உறவினர்கள் சிறைக்கு வந்து பார்த்து செல்ல, வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கைதிகள் தங்களின் உறவினர்களுடன், குறிப்பிட்ட நேரம் பொது அழைப்பேசி மூலம் பேசி கொள்ளும் திட்டமும் செயல்பாட்டிலுள்ளது.சில நேரங்களில் 'வீடியோ' கான்பரன்சிங் மூலம் கைதிகள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதற்கான வசதிகளும் சிறையில் செய்யப்பட்டுள்ளன.இச்சூழலில், சிறை கைதிகளுக்கு இணையதளம் மூலம், புதிய வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இதன்படி, வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாள், கைதிகள் தங்கள் உறவினர்களுடன் 'வீடியோ' அழைப்பு மூலம் பேசிக்கொள்ள வசதிகள் செய்யப்படவுள்ளது.சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கைதிகள், இணையதள பயன்பாடு மூலம் உதவி பெற்று கொள்வது குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, கைதிகள் தங்கள் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காண முடியும்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், தங்கள் நெருங்கிய உறவினர்களுடன் 'வீடியோ' அழைப்பு மூலம், பேசும் வசதி உள்ளது. இதுபோன்ற திட்டத்தை, கோவை மத்திய சிறையிலும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதன்படி, 'ஸ்கைப்' உள்ளிட்ட 'பேஸ் ஆப்' மூலம் கைதிகள் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை பெறலாம்.- சிறைத்துறை அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X