ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோளப்
பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு
வேளாண்மை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மக்காச்சோள
வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் நடவு செய்வதற்கும், இனக்கவர்ச்சி
பொறி வைப்பதற்கும் விவசாயிகளுக்கு வேளாண்துறையால்
அறிவுறுத்தப்பட்டது.இதனை செயல்
படுத்திய
கன்னிமார்கோயில் புதுார் விவசாயி ஈஸ்வரனின் வயலை வேளாண்மை இணை
இயக்குனர் பாண்டித்துரை தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு
செய்தது.
அவர் கூறுகையில்,'' இனக்கவர்ச்சிப் பொறிகளால்
அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டதாலும், சூரியகாந்தியை
வரப்புப் பயிராக நடவு செய்ததாலும் படைப்புழுவின் தாக்கம் குறைவாக
காணப்பட்டது'' என்றார். துணை இயக்குனர் ஞானசேகரன், உதவி
இயக்குனர்கள்
சுருளியப்பன், ஜெயலட்சுமி கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE