படைப்புழு பாதிப்பை ஆய்வு செய்த அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படைப்புழு பாதிப்பை ஆய்வு செய்த அதிகாரிகள்

Added : நவ 11, 2019
Share

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்மை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மக்காச்சோள வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் நடவு செய்வதற்கும், இனக்கவர்ச்சி பொறி வைப்பதற்கும் விவசாயிகளுக்கு வேளாண்துறையால் அறிவுறுத்தப்பட்டது.இதனை செயல்
படுத்திய கன்னிமார்கோயில் புதுார் விவசாயி ஈஸ்வரனின் வயலை வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

அவர் கூறுகையில்,'' இனக்கவர்ச்சிப் பொறிகளால் அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டதாலும், சூரியகாந்தியை வரப்புப் பயிராக நடவு செய்ததாலும் படைப்புழுவின் தாக்கம் குறைவாக காணப்பட்டது'' என்றார். துணை இயக்குனர் ஞானசேகரன், உதவி இயக்குனர்கள்
சுருளியப்பன், ஜெயலட்சுமி கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X