வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக்கொலை

Added : நவ 11, 2019
Advertisement

புதுச்சேரி:முத்தியால்பேட்டையில் ரவுடியை வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் அன்பு ரஜினி,35; இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் முன்னாள் மாநில துணைச் செயலர். இவர் மீது காலாப்பட்டு மற்றும் கோட்டக்குப்பம் போலீசில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.ரவுடியான இவர், நேற்று இரவு 9:00 மணியளவில், தனது நண்பர்கள் மூவருடன் பி.ஒய்.01.சி.இ 3915 பதிவு எண் கொண்ட காரில், காலாப்பட்டில் இருந்து முத்தியால்பேட்டை சோலை நகருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை அன்பு ரஜினி ஓட்டி வந்தார்.
முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதி- சாலை தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தின் பைகள் மாட்டியிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காரை முந்தி வந்து வெடிகுண்டை வீசியது. அதில் காரின் கண்ணாடி உடைந்தன. காரில் இருந்த அன்பு ரஜினி உள்ளிட்ட நான்கு பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களில் அன்பு ரஜினியை சுற்றி வளைத்த மர்ம கும்பல் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றது.
தகவலறிந்த சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், எஸ்.பி.,மாறன், முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அன்பு ரஜினி உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல்நிபுணர்கள் வெடிகுண்டு துகல்கள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் அஜித் அங்கும் இங்குமாக ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X