சுற்றுலா நகரில் மரணக் குழி ரோடுகள்:மெத்தனத்தில் நகராட்சி

Added : நவ 11, 2019
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சியில் விபத்தை ஏற்படுத்தும் மரணக்குழி
ரோடுகளால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் சில ஆண்டுகளுக்கு முன் கீழ்க்குண்டாறு குடிநீர் திட்டம் செயல்படுத்த 24 வார்டுகளிலும் உள்ள ரோடுகள் தோண்டப்பட்டு பைப் லைன் அமைக்கப்பட்டது. ஓராண்டை கடந்தும் தோண்டிய ரோட்டை முழுமையாக சீரமைக்காமல் விட்டுவிட்டனர்.இதனால் ரோடு குண்டு, குழியுமாக மாறியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சீரமைக்க வலியுறுத்தியும் நகராட்சி கண்துடைப்பு பணிகளை மேற்கொண்டது.

இதனால் தற்போதைய மழைக்கு சேதமடைந்த ரோடுகளில் அபாய மரணக்குழிகளாக
பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த ரோட்டில் இயக்கப்படும் வாகனங்கள் பழுதாகி நிற்பது
தினசரி வாடிக்கையாக உள்ளது.வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரோட்டின்
அவலத்தை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.போக்குவரத்து அதிகமுள்ள அண்ணாசலை,
பி.டி., ரோடு, செவன் ரோடு போன்றவை இதற்கு உதாரணம்.

இந்த ரோடுகளில்தான் தாலுகா, பத்திரப்பதிவு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், அரசு ஆஸ்பத்திரி, சுற்றுலா அலுவலகம், நுாலகம், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் என
முக்கிய பகுதிகள் உள்ளன. ரோட்டின் நிலை பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X