வேலையும் நடக்கவில்லை... குழியையும் மூடவில்லை! மதுக்கரை-சுந்தராபுரம் ரோட்டில் குழந்தைகளுக்கு ஆபத்து

Added : நவ 11, 2019
Advertisement

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட, நல்லாம்பாளையம், தண்டல் முத்தன் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது.- ராதாகிருஷ்ணன், நல்லாம்பாளையம்.

தார் சாலை அமைக்கணும்பாலக்காடு ரோடு, குனியமுத்துார், வகாப் பெட்ரோல் பங்க் அருகில், சிறுவாணி டேங்க் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது; மழை நேரங்களில், சகதியாக மாறிவிடுகிறது.- ஷாஜகான், குனியமுத்துார்.

இருகூரில் சுகாதார கேடுஇருகூர், 18வது வார்டுக்குட்பட்ட பகுதியில், சாக்கடை கால்வாய், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியுள்ளது.-தேவராஜ், இருகூர்.

குப்பை அள்ளி நாளாச்சுகே.என்.ஜி.,புதுார், எம்.ஜி.ஆர்.,நகர், 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பை, மாதக்கணக்கில் அள்ளப்படாமல் குவிந்துள்ளது.- லீலாவதி, கே.என்.ஜி.,புதுார்.

ரோடு மோசம்பொள்ளாச்சி ரோடு, பெருமாள் கோவில் பின்புறம், கல்லுக்குழி வீதி, அம்மணிஅம்மாள் காலனியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.-பாலு, அம்மணி அம்மாள் காலனி.

பேரிகார்டு உயரத்தை குறைக்கணும்சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் அருகில் வைக்கப்பட்டுள்ள உயரமான பேரிகார்டால், வாகனங்கள் வருவது தெரிவதில்லை.-கல்யாணசுந்தரம், கணபதிபுதுார்.

விளக்கு எரிவதில்லைபோத்தனுார், தாயம்மாள் லே-அவுட்டில் உள்ள, மின் கம்பங்களில்(எண்: 63, 64, 65), கடந்த நான்கு மாதங்களாக விளக்குகள் எரிவதில்லை.-பழனிசாமி, தாயம்மாள் லே-அவுட்.

ரோட்டுக்கு அவசர சிகிச்சைதிருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் தடுமாறுகின்றனர்.- ரம்யா, ஒண்டிப்புதுார்.

ஆபத்தான மின் கம்பம்தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டில் உள்ள, மின் கம்பம் (எண்: 5), சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.- அனிதா, உலியம்பாளையம்.

அரைகுறை வேலை செய்யுறாங்கபீளமேடு, ேஹாப் காலேஜ் - சிங்காநல்லுார் செல்லும் காமராஜ் ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., நகர், விஜயா வங்கி அருகில், திறந்த நிலையில் இருந்த, போர்வெல் குழாயை அரைகுறையாக மூடிச் சென்றுள்ளனர்.- ராஜேஷ்குமார், வரதராஜபுரம்.

நொய்யலில் கழிவுநீர்நஞ்சுண்டாபுரம் - வெள்ளலுார் செல்லும் சாலையில் உள்ள, நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இங்கு இறைச்சிக்கழிவும் கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.- கருணாமூர்த்தி, நஞ்சுண்டாபுரம்.

விஷ பூச்சிகளால் அச்சம்மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டர்மில், பாரதி நகரில் உள்ள சக்கர விநாயகர் கோவில் ரோட்டில், உள்ள காலி இடம் பராமரிப்பின்றி, விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறிவிட்டது.- மணிமேகலை, பாரதி நகர்.

பள்ளி குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்கணபதி, மணியகாரம்பாளையம், கக்கன் வீதியில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள, ஆபத்தான சாக்கடை கால்வாயில், பள்ளி குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது.- சத்யா, மணியகாரம்பாளையம்.

வீதிகளுக்கு பெயர் போச்சுவடவள்ளி, குருசாமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், வீதிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில், பெயர் அழிந்துவிட்டன. மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.-விஸ்வநாதன், வடவள்ளி.

குழாய் உடைப்பால் வீணாகுது குடிநீர்நஞ்சுண்டாபுரம் ரோடு, நேதாஜி நகரில், சாலையோரம் உள்ள பிரதான குழாயில், உடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக குடிநீர் வீணாகிறது.- பிரபுகுமார், நஞ்சுண்டாபுரம்.

குப்பை தொட்டியை மாற்றணும்மாநகராட்சி, 79வது வார்டுக்கு உட்பட்ட, பொன்னையராஜபுரம், ராமகிருஷ்ணாபுரம் முதல் வீதியில் உள்ள, உடைந்து போன குப்பை தொட்டியை அகற்றிவிட்டு, புது தொட்டி வைக்க வேண்டும்.- கார்த்திக், காந்திபார்க்.

குழியை மூடுங்க!சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர், தண்ணீர் டேங்க் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக, குழி தோண்டப்பட்டது; பல மாதங்களாக பணியும் நடக்கவில்லை. குழந்தைகள் தவறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.- தாமஸ்,

தண்ணீர் டேங்க் ரோடு.

குப்பை அள்ளுவதில்லைபொம்மண்ணம்பாளையம், டான்சா நகரில், குவியும் குப்பை மாதக்கணக்கில் அள்ளப்படாமல் உள்ளது.-கலைசெல்வி, டான்சா நகர்.

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோட்டில் உள்ள, மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தில், ரோட்டில் பெரிய குழி உள்ளது. வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர்.- சூர்யா, வெள்ளலுார்.

குளத்தை காப்பாத்துங்ககாந்திபார்க் - தடாகம் ரோட்டில், முத்தண்ணன் குளக்கரையில், குப்பை, இறைச்சிக்கழிவு குவிக்கப்படுகிறது. இவை குளத்தில் விழுந்து, குளம் மாசடைகிறது.- மணிகண்டன், காந்திபார்க்.

மலுமிச்சம்பட்டியில் வீணாகுது குடிநீர்பொள்ளாச்சி ரோடு, மலுமிச்சம்பட்டி - செட்டிபாளையம் செல்லும் ரோட்டில், அம்மன் ஸ்டீல்ஸ் அருகில், பழனிசாமி நகர் நான்காவது வீதி சந்திப்பில், குழாய் உடைப்பால், பல மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- விஜயன், மலுமிச்சம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X