பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை சேகரித்து பயன்படுத்தும் எஸ்.ஐ.,

Added : நவ 11, 2019
Advertisement

'மறைநீர்' பொருளாதாரம் என்ற வார்த்தையை இன்னும் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் அன்றாடம் அதிகாலையில் காபி அருந்துகிறோம்.அதில் மறைநீரின் அளவு
140 லிட்டராகும். அதாவது ஒரு காபி் செடியை வளர்த்து, கொட்டை அறுவடை செய்து, துாளாக்கி, ஏற்றுமதியாகும் வரை அதில் மறை நீர் மறைந்துள்ளது.

இது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. இந்த மறைநீர் பொருளாதாரத்தை இங்கிலாந்து பொருளாதார நிபுணர் ஜான் ஆண்டனி ஆலன் கண்டறிந்தார். இந்த மறைநீர்
தத்துவத்தை உணர்த்து, தற்போதைய நீர்தேவையையும், சிக்கனத்தை உணர்ந்து 6 ஆண்டுகளாக மழைநீரை சேகரித்து குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகிறார் தேனி ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. பாலகங்காதர திலகர்.


மழைநீர் சேகரிப்பு:



தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனது வீட்டின் 1,400 சதுர அடி மாடியில் (நடுவில் வழிந்தோடும் விதமாக) தலா 650 லிட்டர் என இரு பகுதியாக பிரித்து, ஒன்றை போர்வெல்லில் செறிவூட்டவும், மற்றொரு பகுதி மழைநீரை தொட்டியில் சேகரித்து குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகின்றனர். மாடியின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரை சேகரிக்க சுத்தமான 'சில்வர்' பாத்திரங்களை எப்போதும் தயார் நிலையில் உள்ளது.


போர்வெல் செறிவூட்டல்:



மாடியில் கிடைக்கும் நீரை குழாய் மூலம் வீட்டின் வராண்டாவில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கும், போர்வெல் உள்ள இடத்திற்கு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். மழைநீர் சேகரிப்பு தொட்டி 5 அடி நீளம், 6 அடி அகலம், 5 அடி உயரம் என 4,860 லிட்டர் மழைநீரை சேமித்து, சூரியஒளி படாமல் பராமரிக்கிறார். போர்வெல் உள்ள இடத்தில் கூழாங்கற்கள், மணல், ஜல்லிக்கற்கள் அடுக்கடுக்காக அமைத்து, மழைநீர் செறிவூட்டல் அமைத்துள்ளார். இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைவதில்லை.


மழைநீர் பயன்பாடு விழிப்புணர்வு:

பாலகங்காதரதிலகர் கூறுகையில், “2014 முதல் வீட்டில் மழைநீரை சேகரித்து குடிக்கவும்,
சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் குடிநீராக மட்டும் பயன்படுத்துகிறோம். பணி நிமித்தம் எங்கு வெளியில் சென்றாலும், ஒரு கேனில் மழைநீரை குடிக்க எடுத்துச் செல்வது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பழக்கமாகி விட்டது.

பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு ஏரி குளங்களை துார்வாரமல் இருப்பதால் தவிக்கிறோம். அதற்கான மாற்று ஏற்பாடாக நீரை சிக்கனமாக
பயன்படுத்தவும், மழைநீரை சேகரித்து பயன்படுத்துவதை , ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் ஏற்படுத்த வேண்டும். அதோடு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதையும் வழக்கமாக கொள்ள வேண்டும்.”,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X