பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சர்க்கரை நோய் முகாம்

Added : நவ 11, 2019
Advertisement

தேனி:தேனி மோகன் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினமான நவ.,14. அன்றுஇலவச சர்க்கரை நோய் முகாம் நடக்கிறது.

அன்று காலை 9:00 முதல் பகல் 1:00 மணி வரை ரத்த சர்க்கரை அளவு, பாத பராமரிப்பு பரிசோதனை, மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு கண்டறிதல், ஐந்து வகை கொழுப்பு
சத்துக்களின் அளவினை கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் நரம்புகள் செயல் இழந்து பாதங்களில் வலி, உஷ்ணம்
ஏற்படும். குளிர்ச்சியை உணர முடியாது. பாதங்களில் சிறு புண் ஏற்பட்டு கவனிக்காமல்
இருந்தால் பெரிய புண்ணாக வாய்ப்பு உள்ளது. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தடைபட்டு கால்களையே நீக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நோயாளிகளுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தால் கால் இழப்பை தவிர்க்கலாம். தோல்தடிமன், கால் ஆணியால் ஏற்படும் பாத அழுத்தங்களை கண்டறிய 3டி பாத ஸ்கேன் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.

சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் மோகனவெங்கட்ராமன் கூறுகையில், மருத்துவ முகாமில் இருதய நோய் நிபுணர் டாக்டர் மணியப்பன், அறுவை சிகிச்சை நிபுணர் சங்கையராஜா, எலும்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு முகாமில் பரிசோதிக்க உள்ளார்.'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X